பதில் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர்
பிள்ளைகள் மீதான பெற்றோரின் அடிப்படை உளவியலை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். `என் பிள்ளை நல்லபிள்ளைதான். வந்ததுதான் சரியில்லை' என்பதுதான் பொதுவாக பெற்றோர்களின் நினைப்பு. பெண்ணைப் பெற்றவர்கள், மகனைப் பெற்றவர்கள் என இருவருக்குமே இது பொருந்தும். எங்கேயோ ஒரு சில நியாய, அநியாயம் தெரிந்த பெற்றோர்கள் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள். இது ஒருவகையில் பாசம் கண்ணை மறைக்கிற விஷயம்தான். அதனால், நீங்கள் திருமண வாழ்க்கையில் வருகிற சின்னச் சின்ன பிரச்னைகளை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்வதை தவிர்க்கலாம்.